குதிகால் வலி பெரும்பாலும் அதிக நடைப்பயிற்சி, தவறான காலணி பயன்படுத்துதல் அல்லது கால்தசை அழுத்தம் காரணமாக ஏற்படலாம். இதை குறைக்க முதலில் ஓய்வு அவசியம். அதிக நேரம் நின்று வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். தினமும் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் வைத்து 10 - 15 நிமிடங்கள் அழுத்தம் கொடுத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். சரியான மென்மையான காலணி பயன்படுத்துவது மிகவும் முக்கியம். காலை எழுந்தவுடன் மெதுவான கால்வளைப்பு பயிற்சிகள் செய்வது நல்லது.