“75 ஆண்டுகால திமுக வலிமையாக இருப்பதற்கு, அனைத்திலும் மக்களோடு மக்களாக இணைந்து நின்று செயலாற்றுவதே காரணம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை திமுக மேற்கு மண்டல வாக்கு சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் பேசிய அவர், “என்றைக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; நாமெல்லாம் சேவகர்கள். பாக முகவர்கள் தங்களுக்குரிய இலக்குகளை அடைந்தாலே திமுக எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிடும். முகவர்களுக்கு 350 வாக்குகள் டார்கெட் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.