வளர்ந்து வரும் அறிவியல் புரட்சியில் மருத்துவத்துறை பல மைல்கல்களை எட்டி உலகையே பிரம்மிக்க வைக்கிறது. அந்த வகையில், சோமாலியா நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு ஹைதராபாத் மருத்துவமனை ஒன்று மறுவாழ்வு கொடுத்துள்ளது. 19 வயது இளைஞரின் முழங்கையில் இருந்து ஆணுறுப்பை உருவாக்கி அவரது உடலில் பொருத்தி அரிய சாதனையை படைத்துள்ளது. 4 வயது முதலே சிறுநீர் கூட கழிக்க முடியாமல் ரண வேதனை அனுபவித்து வந்த இளைஞருக்கு புதிய ஆணுறுப்பை பொருத்தி மருத்துவர்கள் வியக்க வைத்துள்ளனர்.