வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதித்து வருகின்றன. அதன்படி, 2025–26 நிதியாண்டில் மட்டும் ரூ.7,086.63 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2024–25-இல் ரூ.6,974.79 கோடியாக இருந்தது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.26,170 கோடிக்கும் மேல் வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.