ரயில் தீ விபத்தில் உடல் கருகி பயணி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி அருகே டாடா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று (டிச., 29) ஏற்பட்ட  தீ விபத்தில் உடல் கருகி பயணி ஒருவர் உயிரிழந்தார். ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றிய பெட்டிகளை ரயிலில் இருந்து லோகோ பைலட் நீக்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே இருப்புப்பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி