பாரீஸ் ஒலிம்பிக்.. வரலாறு படைத்த மனு பாக்கர்!

பாரீஸில் நடந்து வரும் நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே இரண்டு வெண்கல பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், தற்போது 3வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார் மனு பாக்கர். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நாளை (ஆகஸ்ட் 3) மதியம் 1 மணிக்கு இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. 3வது பதக்கத்தை அவர் வெல்வாரா என இந்திய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி