பள்ளிகள் திறப்பை ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து மேலும் 4 நாட்கள் ஒத்திவைத்து, ஜூன் 8-ஆம் தேதி திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர்களுக்குச் சென்ற குடும்பங்கள், போக்குவரத்து நெரிசலின்றித் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்த கூடுதல் விடுமுறையை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.