தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் வழங்கும் முன் பெற்றோரின் அனுமதியை பெறுவது கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தலைமை ஆசிரியர்கள் முறையான அனுமதி பெற்ற பின்னரே மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அனைத்து பள்ளிகளிலும் அமலுக்கு வருகிறது.