சிகர்ஸ் ஒட்டுண்ணி கடித்த 10 முதல் 12 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வெளிப்படும். ஆரம்பத்தில் ஒரு சிறிய சிவப்பு தடிப்பு போல் தோன்றும், அது ஒரு கருப்பு புண்ணாக மாறும். பொதுவாக அக்குள், கால்கள், பிறப்புறுப்புகள் மற்றும் கழுத்தில் அல்லது அதைச் சுற்றி தோன்றும். காய்ச்சல், தலைவலி, கண் சிவத்தல், தொண்டை வலி, தசை வலி மற்றும் வறட்டு இருமல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். சில சமயங்களில் மூளை மற்றும் இதயத்தை பாதிக்கும் சிக்கல்கள் ஏற்படலாம்.