பராசக்தி ஓடிடியில் சாதனை: அன்-கட் வெர்ஷன் விரைவில் வெளியீடு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' திரைப்படம், ஓடிடியில் வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடி நிமிடங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. தணிக்கை குழுவால் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் மற்றும் நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய 'அன்-கட்' (Un-cut) பதிப்பு இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் முழுமையான பதிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி