தமிழகம் முழுவதும் இன்று தாள்-2 ஆசிரியர் தகுதித்தேர்வு

சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்கான டெட் தேர்வு நேற்று (நவ.15) தொடங்கியது. முதல் தாள் தேர்வில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றனர். 2 ஆம் தாள் தேர்வு இன்று (நவ.16) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 1,241 மையங்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் 2 ஆம் தாள் தேர்வு இன்று காலை நடைபெறுகிறது. இதில் 3.73 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை துரிதமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி