முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் என். மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பதநீர், பனங்கருப்பட்டி உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பனைப் பொருட்களை ஊக்கப்படுத்தவும் ரூ.16 கோடி நிதியுதவியுடன் 'பனை மேம்பாட்டுக் கழகம்' அமைக்கப்படும் என முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.