ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் பதநீர், பனங்கருப்பட்டி, மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களுக்கு ஊக்கமளிக்கப்படும். பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பும் வருவாய் உறுதி செய்யும். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியினை ஊக்குவிக்க குறுவைத் திட்டத்திற்காக ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.