பழனி நில மோசடி வழக்கு.. சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தொடர்பான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கு தொடர்பான அறிக்கை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கலாமா அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி