பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 930 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் மொத்தமாக 14 காளைகளை அடக்கிய நத்தம் பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து மஞ்சம்பட்டி துளசி 12 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தையும், 11 காளைகளை அடக்கி பிரபாகரன் 3ஆம் இடத்தை பிடித்தனர். முதலாம் இடத்தை பிடித்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.