மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை பாலமேட்டில் இன்று (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் வழங்கப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டியில், மாடுபிடி வீரர்கள் 4 பேர், காளை உரிமையாளர்கள் 5 பேர், பார்வையாளர்கள் 4 பேர் என மொத்தம் 13 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்.
நன்றி: பாலிமர்