போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் அத்துமீறும் பாகிஸ்தான்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு & காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறலில் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் நகரின் மீது மீண்டும் ட்ரோன்களை அனுப்பியுள்ள பாகிஸ்தானால் பரபரப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தரப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி