2025ஆம் ஆண்டில் பயங்கரவாதம் தொடர்பான உயிரிழப்புகள் 6 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முதன்முறையாக 'உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில்' (Global Terrorism Index) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட ஆய்வில், "பாகிஸ்தானில் பயங்கரவாதம் சார்ந்த உயிரிழப்புகள் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன. 2025ஆம் ஆண்டில் அந்நாட்டில் 1,139 பயங்கரவாத உயிரிழப்புகளும், 1,045 பயங்கரவாதச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன" என தெரியவந்துள்ளது.