பாகிஸ்தான் அணிக்கு 212 ரன்கள் இலக்கு

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய போட்டி தொடரில் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இன்று (அக்.03) பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 211 ரன்களை குவித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61, திலக் வர்மா 51* ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 212 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் வெல்லும் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் செல்லும்.

தொடர்புடைய செய்தி

✕
✕