இந்தியாவில் கடல் வழியாகத் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகே உள்ள சார்னா தீவில், சுற்றுலாப் பயணிகள் போர்வையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஸ்கூபா டைவிங், போர் நீச்சல் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனை வளர்க்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.