ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து குஜராத், ராஜஸ்தானிலும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜம்முகாஷ்மீர், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்கத் தொடங்கியதால் எல்லை மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது.
நன்றி: NewsTamilTV24x7