சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் 7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை (ஜன.04) நடைபெறுகிறது. பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் இஷாக் தார், சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்யி-ன் அழைப்பின் பேரில் இன்று (ஜன.03) சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் இஸ்லாமாபாத்தில் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.