வலியே இல்லாமல் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வலி நிறைந்த தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு வழியில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என 2017-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ரமணி தகவல் அளித்துள்ளார். அரபு நாடுகளில் கடுமையான குற்றம் செய்பவர்கள் தூக்கிலிடப்படுவது வழக்கம். இந்தியாவில் பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அரிதாகவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றன.