சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி தப்பிச் சென்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து கொழும்பு பண்டாரநாயக்கே விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி தப்பி வந்துள்ளதாக சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து, இலங்கை பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.