ரேஷன் கடைகளில் பாக்கெட் கோதுமை (ஆட்டா) வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.14,830 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பாக்கெட் கோதுமை உள்ளிட்ட தரமான அளவான அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் வினியோகம் செய்யப்படும். படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.