இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

இலங்கைக்கு எதிராக ஆக.15 அன்று தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரின்போது அவருக்கு இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால், அவருக்கு முழு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. முக்கியமான இத்தொடரில் பும்ரா விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕