அதிமுகவில் அரசியல் வாழ்வைத் தொடங்கிய பி.கே. சேகர் பாபு, 2001, 2006-ல் ஆர்.கே. நகர் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011-ல் திமுகவில் இணைந்து சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரானார். தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் 2016, 2021 மற்றும் 2026 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் CMDA அமைச்சராகப் பொறுப்பு வகித்து, கோயில் திருப்பணிகள், குடமுழுக்குகள் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.