பீகாரில் ஒவைசி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பீகாரில் மீண்டும் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்கவைத்துள்ளது. இந்த கட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 25 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் சேர்க்காததால் அதிருப்தியடைந்த ஒவைசி, தனித்து களம்கண்டு வெற்றிவாகை சூடியுள்ளார். எதிர்க்கட்சிகளின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி