3000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்கள்: சீமான் கேள்வி

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3,000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு காலங்கடத்துவது கண்டிக்கத்தக்கது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், திமுக அரசின் அலட்சியத்தால் ஏழை, எளிய மக்களின் மருத்துவச் சேவை தடைபட்டு, உயிரிழக்கும் பேராபத்து ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்று திமுக ஆட்சியாளர்கள் கூறுவது அப்பட்டமான பொய் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி