ஒரு த்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், ஒரு த்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சிக்கு Coimbatore Master Plan 2041 வெளியிட்டுள்ளோம். நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்!" என்று பதிவிட்டுள்ளார்.