14,000 பறவைகளை கொன்று அழிக்க உத்தரவு

கேரளாவின் கோழிக்கோட்டில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 5 இடங்களில் இன்று முதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகள், விரைவு அதிரடிப் படையினரால் கொன்று அழிக்கப்படும். வாத்துகள், கோழிகள், காடைகள், பிற வீட்டுப் பறவைகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இறைச்சி விற்பனைக்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் சென்னையிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕