அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை பதுக்குவதையும், கருப்பு சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடையே 25 நாட்கள் கட்டாய இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.