திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுக்காவில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் பெயர், முகவரிகளை சேகரிக்க அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் அலுவலர்களுக்கு உதவிட வேண்டும் என வட்டாட்சியர் அய்யாசாமி என்பவர் சுற்றறிக்கை விடுத்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து, வட்டாட்சியரை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.