நெல்லை, குமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மிக கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்து. இதனால் அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) இறுதி அறிக்கையின் அடிப்படையில், இன்று மாலை நிலவும் மழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்டங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். முன்னதாக, வானிலை நிலவரத்தை முறையாக ஆய்வு செய்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.