பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் அணி

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 31) ஓபிஎஸ் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த உறவை முடித்து கொள்கிறோம். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாங்கள் சொல்லத் தேவை இல்லை. அதை நாடே அறியும். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி