முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்., 20) சந்தித்து பேசியுள்ளார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஓபிஎஸ், முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் இதுவரை தனது அரசியல், கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. இந்த சூழலில் முதலமைச்சருடன் நடந்துள்ள சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தற்போது திமுகவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.