திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ‘துரோகி எடப்பாடி’ கோஷமிட்ட தொண்டர்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.27) தமது ஆதரவாளர்களோடு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். தொடர்ந்து, அவர்  திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். முன்னதாக, அறிவாலயம் வந்த தொண்டர்கள்  ‘துரோகி எடப்பாடி' என்ற கோஷமிட்டு, ஓபிஎஸ்-ஐ வரவேற்றனர். அதிமுகவில் இருந்தபோது தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நன்றி: விகடன்

தொடர்புடைய செய்தி