திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டு வருவதாகவும், முதலமைச்சரை ஓபிஎஸ் சந்தித்ததும் அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது நியாயமான நடவடிக்கை என இப்போது தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு தீங்கு செய்துவிட்டார்” என்றார்.