இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் நேரடி தூது..!

அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். நமது வெற்றியை நாளை சரித்திடமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்" என நேரடியாக தூது அனுப்பியுள்ளார். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று (ஜூன் 5) அழைப்பு விடுத்த நிலையில், இன்று (ஜூன் 6) ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி