புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிரகாஷ் (17) என்பவரும் கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படித்துவந்தாலும், காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் வீட்டார், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். இதனால், கடந்த 28ம் தேதி மாணவி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் மனமுடைந்த பிரகாஷ், நேற்று (ஜூலை 31) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.