மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்க்கட்சிகள் நிறுத்த முயன்றதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றே தொகையை வழங்கினார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். மேலும், இதனால் எதிர்கட்சியினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி கே. பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் நரேந்திர மோடி ஆதரவுடன் திட்டத்தை தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்.