ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் 16 மணிநேர தொடர் விவாதம் இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது. அப்போது பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஆபரேஷன் சிந்தூரை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது அதன் வெற்றியை குறிக்கிறது. சரியான கேள்விகளை எழுப்ப தவறிய எதிர்க்கட்சிகள், நமது வீரர்களின் தீரத்தை பாராட்ட மனமில்லாமல் செயல்படுகின்றனர்" என ஆதங்கமாக பேசினார்.