ஊட்டி மலை ரயில் சேவை 5வது நாளாக ரத்து

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் பாறாங்கற்கள் விழுந்தன. இதனால், கடந்த 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாததால், இன்றும் 5வது நாளாக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி