20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல் வழங்கப்படும் நிலையில் அதை கட்டாயமாக்கி மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. , இ20 எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதற்கு, 2023 - 25 முதல் தயாரிக்கப்படும் வாகனங்களே பெரும்பாலும் ஏற்றவை. பழைய வாகனங்களில் மைலேஜ் குறையலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி