உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி அளிக்கப்படும். வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வர வேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும் என கூறியுள்ளது.