நாம் தமிழர் கட்சி சார்பில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 234 தொகுதியிலும் போட்டியிடும் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்களை இன்று (பிப்., 21) நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாநாட்டில் ஒரே மேடையில் அறிமுகம் செய்கிறார். இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள் என அனைவருமே ஏதாவது ஒரு துறையில் பட்டம் முடித்தவர்கள் என கூறப்படுகிறது.
நன்றி: ஏஎன்ஐ