தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய (ஏப். 16) அலுவல் தொடங்கிய நிலையில் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்றுதான் கூறியுள்ளோம், கூட்டணி அரசு எனக்கூறவில்லை. கூட்டணியானது திமுகவை வீழ்த்துவதற்குதான், கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை” என்றார்.
நன்றி: Spark Media