தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளார். நாளை காலை 8 மணி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ள இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிலையில், 10,000 பேர் அமரக்கூடிய அரங்கில் பாதுகாப்பு கருதி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 40 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட 16 தனித்தனி பெட்டிகள் அமைக்கப்பட்டு, ஒரு பெட்டிக்கு 315 பேர் வீதம் மின்விசிறி வசதியுடன் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.