டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அளவு அதிகரித்துவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும் 50% ஊழியர்கள் மட்டும்தான் வரவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மற்ற ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே வேலை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. கட்டுமானப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பணியாளர்களுக்கு ரூ.10,000 நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.