ஆன்லைன் வர்த்தகம்.. ஆசைக்காட்டி ஆசிரியரிடம் ரூ.57 லட்சம் மோசடி

தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி ரூ.57 லட்சத்து 45 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ஆசிரியர், பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் லாபத் தொகை கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕